The Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள்

கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள்
(The Bear and the Bees - Aesop Moral Story)

அது ஒரு அழகிய அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு பயங்கரமான கரடி ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அந்த கரடி மிகவும் பசியோடு காட்டில் உணவிற்காக அலைந்து திரிந்தது. வெகு நேரம் ஆகியும் அதற்கு உணவு கிடைக்கவில்லை.

The Bear and the Bees - Aesop Tamil Moral Story 1

வழியில் ஒரு மரத்தின் மீது பெரிய தேன்கூடு ஒன்றை கண்டது. தேன்கூட்டைக் கண்ட கரடி, தேன்கூட்டைக் கலைத்து அதில் உள்ள தேனை குடிக்க நினைத்து அதன் அருகில் சென்றது.

The Bear and the Bees - Aesop Tamil Moral Story 2

கரடி தேன்கூட்டிற்கு அருகில் செல்லும் சமயத்தில் வெளியில் சென்று இருந்த தேனீ ஒன்று கரடி தேன்கூட்டிற்கு அருகில் வருவதை பார்த்து அதன் அருகில் சென்றது. கரடி அந்த தேனியை பார்த்து, நான் இப்போது இந்த தேன்கூட்டில் உள்ள தேனை சாப்பிட போறேன் என்று சொன்னது, தேனீயும் இது எங்கள் வீடு. இதை ஒன்றும் செய்யாதிங்கள் என்று கெஞ்சியது.

The Bear and the Bees - Aesop Tamil Moral Story 3

கரடியோ தேனியை பார்த்து, நீயோ அளவில் சிறியவன். நான் உன்னை விட பலமடங்கு பெரியவன். உன்னால் என்னை ஒன்றும் செய்ய இயலாது என்று கூறியது. நிலைமையை உணர்ந்த தேனீ கரடியிடம், எனக்கு ஒரு நிமிடம் அவகாசம் கொடு, நான் என்னுடைய பொருட்களை தேன்கூட்டில் இருந்து எடுத்து சென்று விடுகிறேன் என்று கரடியிடம் கூறியது. கரடியும் இதற்கு ஒத்துக்கொண்டது.

தேன் கூட்டிற்கு சென்ற அந்த ஒற்றை தேனீ, தேன்கூட்டில் இருந்த எல்லா தேனீக்களிடம் நடந்த சம்வத்தைக்குறியது. எல்லா தேனீக்களும் உடனே கூட்டிலிருந்து வெளியே வந்தன.

The Bear and the Bees - Aesop Tamil Moral Story 4

கூட்டிலிருந்து வெளியே வந்த எல்லா தேனீக்களும் உடனே கரடியை கொட்டத்தொடங்கின. கரடிக்கு தேனீக்கள் கொட்டியதால் வழியால் துடித்தது, மேலும் வலி தாங்க முடியாத கரடி ஓடத்தொடங்கியது. தேனீக்களும் கரடியை விடாமல் மிகவும் வேகமாக தொடர்ந்து சென்றன.

போராட்டத்தின் முடிவில் வேறு வழியில்லாமல் தேனீக்களிடமிருந்து தப்பிக்க கரடி காட்டில் இருந்த ஒரு ஆற்றின் நடுவில் குதித்தது. தேனீக்களும் கரடியை மன்னித்து தேன்கூட்டிற்கு சென்றன.

The Bear and the Bees - Aesop Tamil Moral Story 5

நீதி: உருவத்தை வைத்து யாரையும் அலட்சியமாக என்ன கூடாது!



The Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள் The Bear and the Bees - Aesop Moral Story | கரடியும் தேனீக்களும் - ஈசாப் நீதிக் கதைகள் Reviewed by Dinu DK on January 15, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.