தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog

அது ஒரு அழகிய காடு, அந்த காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.  அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.

அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, ஆமை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மை கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன. 


எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் தவளை ஒன்று வந்து கொண்டிருந்தது.

The Scorpion and the Frog 1

தவளையைக் கண்ட தேள், “தவளையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா?” என்று கேட்டது.

The Scorpion and the Frog 2

"நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்!", என்றது தவளை.

தேளும் தவளையின் முதுகில் ஏறிக்கொண்டது. தவளை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது, சிறிது தூரம் தான் தவளை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது, நான் பல பேரைக கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.

The Scorpion and the Frog 3

ஆனால் நான் ஒரு நாளும், தவளையை கொட்டவில்லை, இந்த தவளையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்?

Also Read: ஆமையும் இரண்டு வாத்துகளும்

இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று தவளையை கொட்டிப் பார்க்க நினைத்தது.

தேள் தவளையின் முதுகில் கொட்டியது.  அனால் தவளை பேசாமல் போய்க்கொண்டிருந்தது.

The Scorpion and the Frog 4

தேள் தவளையைப் பார்த்து, "தவளையாரே! உமது உடம்பில் வலியே வருவதில்லையா?" என்று கேட்டது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத தவளை, "எனது முதுகு வழவழப்பானது. அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை" என்று சொன்னது தவளை.

ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும்.  இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது தவளை.
ஓகோ; அப்படியா? என்று கேட்ட தேள்,  மெதுவாக தவளையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது.

கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் தவளையை கொட்ட ஆரம்பித்தது.

தேள் கொட்டவருவதை அறிந்து தவளை தலையை தண்ணீருக்குள் இழுத்துக் கொண்டது. தேள் நீரோடையில் விழுந்து விட்டது.

The Scorpion and the Frog 5

தனக்கு உதவி செய்த தவளைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.  தவளை கரையை நோக்கி நீந்திச் சென்றது.

Also Read: வெட்டுக்கிளியும் ஆந்தையும்

நீதி:
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்து விடலாகாது.  அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும். மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.

Read and download The Scorpion and the Frog Aesop's moral story (தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை) with pictures for kids.
தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog தேளும் தவளையும் - ஈசாப் நீதிக் கதை | The Scorpion and the Frog Reviewed by Dinu DK on June 22, 2016 Rating: 5

16 comments:

 1. எனக்கு மிகவும் பிடித்த வலைதளங்களுள் தமிழ் சிறுகதைகள்.காம் உம் ஒன்று.
  மேலே உள்ள கதையில் பல தவறுகள் உள்ளன. உதாரணமாக
  தலைப்பு : தேளும் ஆமையும் என்றே இருக்க வேண்டும்.

  ஏனெனில் தவளைக்கு ஏது ஓடு ? சித்திரங்களும் கதையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவையாக உள்ளது.

  தயவுசெய்து தவறுகளைத் திருத்தி இனிமேல் கவனமாக கதைகளை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.!!

  ReplyDelete
 2. Hello Niranchan Ganesan,
  தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. கதையை மறுபதிவு செய்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. En kutty magal rombavum virumbi padikkum kathaigal... vaalthukkal.

   Delete
 3. சிறுகதைகள் மிகவும் அருமை, வலைதளத்திற்க்கு என் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 4. uvuveveveenyuteweubwemugwememosas

  ReplyDelete
 5. Very Good stories need more like this in tamil

  ReplyDelete
 6. thelum thavalaiyum entra intha kathayai padithu itharku aamaiyum thelum entra thalaippai vaithirukkalam entru kooriyathu kathaiyai sinthikka vaiththathu.Nice Story.

  ReplyDelete

Powered by Blogger.