சிங்கமும் சிறு எலியும் | The Lion and The Mouse Story in Tamil

சிங்கமும் சிறு எலியும்
(The Lion and The Mouse)

ஈசாப் நீதிக் கதைகள் - சிங்கமும் (Lion) சிறு எலியும் (சுண்டெலியும்) (Mouse). Aesop's Fables - The Lion and the Mouse Moral Short Story with Pictures in Tamil for Kids.

ஒரு நாள் மதிய வேளையில் சிங்கம் ஒன்று காட்டில் தூங்கிக் கொண்டு இருந்தது.

The Lion and The Mouse 1

அங்கு வந்த எலி சிங்கத்தின் மீது குதித்து விளையாடியது.

The Lion and The Mouse 2

இதனால் சிங்கம் விழித்தெழுந்தது கோபம் கொண்ட சிங்கம் எலியைப் பிடித்து, “நீ எனக்கு இன்று நல்ல மதிய உணவாக போகிறாய்” என்று கர்ஜித்தது.

ஆனால் எலியோ! சிங்கத்திடம், “என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் உங்கள் மீது ஏறிவிட்டேன். என்னை சாப்பிடாதீர்கள்”. எனக் கெஞ்சிக் கேட்டது. 

The Lion and The Mouse 3

சிங்கத்திடம் “இன்று நீங்கள் என்னைக் கொல்லாமல் விட்டால் என்றாவது ஒரு நாள் உங்களுக்கு என் நன்றியைத் திருப்பிச் செலுத்துவேன்” என்றது. சிங்கமோ, “இவ்வளவு சிறிய உடம்பை வைத்துகொண்டு எனக்கு நீ உதவ போகிறாயா?” என்று எலியை ஏளனம் செய்தது. இருந்தாலும் எலியைக் கொல்லாமல் போக விட்டது.

சில நாட்களின் பின் சிறிய இறைச்சி துண்டிற்கு ஆசைப்பட்ட அந்தச் சிங்கம் வேடர்கள் வைத்திருந்த வலையில் சிக்கிகொண்டது.

The Lion and The Mouse 4

வலையில் அகப்பட்ட சிங்கம் பலமாகக் கர்ஜித்து அழுதது.

அந்தச் சிறிய எலி சிங்கத்தின் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்திற்கு வந்து வலையைத் தன் பல்லினால் வெட்டி சிங்கத்தைத் தப்பிப் போக உதவியது.

The Lion and The Mouse 5

சிங்கம் இந்தச் சின்ன எலி என்னைக் காப்பாற்றி விட்டதே என்று வெட்கப்பட்டு எலிக்கு தன்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சொல்லிச் சென்றது.

நீதி: உருவத்தை யாரையும் பார்த்து ஏளனம் செய்யக் கூடாது.

உடலில் பெரியவராக இருப்பதால் தான் மேலானவர் என்று ஆணவம் கொள்ளக் கூடாது. சிறிய பலமற்ற ஒருவர், தன்னிலும் பெரிய பலமான ஒருவருக்கு உதவும் சந்தர்ப்பங்களும் வரும்.

சிறிய துரும்பும் பல்குத்த உதவும் என்பது பழமொழி!


Aesop's Fables - The Lion and the Mouse Moral Short Story with Pictures in Tamil for Kids.

சிங்கமும் சிறு எலியும் | The Lion and The Mouse Story in Tamil சிங்கமும் சிறு எலியும் | The Lion and The Mouse Story in Tamil Reviewed by Dinu DK on January 21, 2014 Rating: 5

5 comments:

Powered by Blogger.