இரண்டு முட்டாள் ஆடுகள் | Two Silly Goats Story in Tamil

இரண்டு முட்டாள் ஆடுகள்
(Two Silly Goats Moral Story in Tamil)

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

Two Silly Goats Moral Story - 1

அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

Two Silly Goats Moral Story - 2

முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.

Two Silly Goats Moral Story - 3

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.Two Silly Goats Moral Story in English

Two Goats, frisking gayly on the rocky steeps of a mountain valley, chanced to meet, one on each side of a deep chasm through which poured a mighty mountain torrent. The trunk of a fallen tree formed the only means of crossing the chasm, and on this not even two squirrels could have passed each other in safety. The narrow path would have made the bravest tremble. Not so our Goats. Their pride would not permit either to stand aside for the other.

One set her foot on the log. The other did likewise. In the middle they met horn to horn. Neither would give way, and so they both fell, to be swept away by the roaring torrent below.

Moral: It is better to yield than to come to misfortune through stubbornness.


இரண்டு முட்டாள் ஆடுகள் (Irandu Muttall Aadugal Moral Story in Tamil). Read and download Aesop’s famous moral story of Two Silly / Foolish Goats with pictures for kids in Tamil.
இரண்டு முட்டாள் ஆடுகள் | Two Silly Goats Story in Tamil இரண்டு முட்டாள் ஆடுகள் | Two Silly Goats Story in Tamil Reviewed by Dinu DK on October 13, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.