தெனாலி ராமன் கதைகள் - புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
(Thenali Raman Stories - Pulikku Piranthathu Poonai Aaguma)
ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.
சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.
அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான்.
அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார்" என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.
தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான்.
இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை
அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.
காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினர்.
மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார்.
காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது" என்று காவலர்கள் கூறினர்.
அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார்.
அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.
மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார்
அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்" என்று கூறினான்.
மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.
தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.
Thenali Raman Stories - புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?
Reviewed by Dinu DK
on
October 03, 2013
Rating:

Very nice
ReplyDeletenice!
ReplyDeleteexcellent
ReplyDeletegood
ReplyDeletemmmmm...... its better
ReplyDeletevery nice
ReplyDeletegood
ReplyDeleteதெனாலிராமன் தன் மகனிடம் 'வாயுள்ள பிள்ளை பிளைத்துக்கொள்ளும்' என்று சொல்வதாக நியாபகம். மகனும் அவர் சொல்வதைப் புரிந்து கொண்டு பூக்களை தன் வாயில் போட்டு சாப்பிட்டு விடுவான்.
ReplyDeleteohhhh maybe its crct
DeleteNice
ReplyDeletesuper
ReplyDeletehe is always smart
ReplyDeleteCorrect! 'வாயுள்ள பிள்ளை பிழைக்கும்'-னு தான் தெனாலி ராமன் சொல்லுவார்! அதுதான் hint!
ReplyDelete