முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம்

முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம்

ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார்.

வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார். வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் முல்லாவின் நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.
Mulla Nasruddin Duck Soup
வாத்தைப் பிடிக்க முல்லா எடுக்கும் பிரயாசையையும், அதில் அவர் அடிக்கடி தோல்வியடைவதையும் கண்ட நண்பருக்குச் சிரிப்பு வந்தது.

"என்ன முல்லா அவர்களே வாத்து வேட்டை நடக்கிறது போலிருக்கிறது" என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

முல்லா உடனே தமது பையிலிருந்த ரொட்டித் துண்டை எடுத்து குளத்து நீரில் நனைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

"என்ன செய்கிறீர்கள் முல்லா  அவர்களே" என நண்பர் கேட்டர்.

"வாத்து சூப்பில் ரொட்டியை நனைத்துச் சாப்பிடுகிறேன்", என்று தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறிச் சமாளித்தார் முல்லா.
முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம் முல்லா கதைகள் - முல்லாவின் தந்திரம் Reviewed by Dinu DK on August 13, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.