Full width home advertisement

Moral Story Stories

Panchatantra Stories

Post Page Advertisement [Top]

பந்தா பரந்தாமன்:-

வில்லாளப்பட்டி என்ற ஊரில் பந்தா பரந்தாமன் என்ற புகழ் மிக்கப் பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். அவரை யாரும் விவாதத்தில் தோற்கடிக்க முடியாது. எந்தவிதமான விஷயங்களானாலும் அவருக்கு அத்துப்படி, எனவே, இயல்பாகவே அவருக்குச் சற்று மண்டைக் கர்வம் ஏறி இருந்தது. நாட்டில் கல்வி அறிவு நிரம்பப் பெற்றவன். பெரிய அறிவாளி வாதங்களில் சிறந்தவன் என்று யாரும் அவர் இருக்கும் போது தலை காட்டிவிட முடியாது. அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு அரசாங்க அதிகாரி வந்தான். அவன் பெயர் ராமகிருஷ்ணன். ல்லாவிதக் கலைகளிலும் அவனுக்குச் சிறிது பயிற்சி இருந்து வந்தது. அரசனின் உதவியால் படித்து முன்னேறியவன். இருப்பினும் அதை வெளிக் காட்டி கொள்ளமாட்டான். அமைதியாகவே தன் பணியினை செய்து வந்தான்.


வீண் ஆர்ப்பாட்டங்கள் செய்து எப்போதும் மக்களின் கவனத்தைத் தன் பக்கம் வைத்துக் கொள்வதில் பந்தா பரந்தாமன் கில்லாடி. சாமர்த்தியக்காரராக விளங்கினார். மக்களில் பலர் அவரை இதன் காரணமாக வெறுத்தனர். என்றாலும் இந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டி கொள்ளவில்லை.

அன்று மஹாபாரதம் பற்றிய காலட்சேபம் நடந்தது. பண்டிதரின் நாவன்மையை ரசித்த வாறு வந்து கொண்டிருந்தான் ராமகிருஷ்ணன். திடீரென்று, "யோவ் பிரசங்கியாரே! நிறுத்தும்" என்று குரல் கேட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். பட்டு பீதாம்பரம் உடுத்தி ஜகஜ்ஜோதியாய் நின்றான் பந்தா பரந்தாமன்.

"என்ன? என்ன விஷயம்?' என்று பதறினார் பாகவதர். என்னையா கதை அளக்கிறீர் நீர்! பீஷ்மரை அர்ஜுனன் கொல்லவில்லை! சிகண்டி தான் அம்பு எய்து கொன்றவனே தவிர அர்ஜுனன் வெறும் கருவிதான். அர்ஜுனனால் அவர் கொல்லப்பட முடியாது. முற்பிறவியில் பெண்ணாக இருந்து பீஷ்மரால் வஞ்சிக்கப்பட்டவனே சிகண்டி என்ற அலியாகப் பிறந்து கோட்டை வாயிலில் இருந்த மாலையை எடுத்துப் போட்டுக் கொண்டு, அர்ஜுனன் தேரில் ஏறி அம்புகளால் பீஷ்மரை துளைத்தான். சிகண்டியை முன் நிறுத்தி அர்ஜுனன் பீஷ்மரைக் கொன்றான் என்பது எல்லாம் மாயாவாதம்! சொல்வதை ஒழுங்காகச் சொல்!'' என்று கம்பீரமாகக் கூறிவிட்டு பாகவதரை ஓரம் கட்டிவிட்டு அவரே சொல்ல ஆரம்பித்தார். இப்படி அநேகரை அவமானப்படுத்துவது பந்தா பரந்தாமன் ஸ்டைல்.

ஒரு சமயம் அறிஞர்கள் பலர் கூடி இருக் கும் சபையில் பல்வேறு விதமான சமஸ்கிருத ஸ்லோகங்களை கூறி தன் மனதில் தோன்றியவாறு அதற்கு விளக்கமும் சொன்னார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருக்கும் இந்த சமஸ்கிருத ஸ்லோகங்களோ, அது வேதத்தின் ஓர் அங்கமா? அல்லது அவர் இயற்றியதா என்று கூடத் தெரியாது. தெரிந்த ஒரு சிலரும் அவருடைய தர்க்கவாதத்திற்கு அஞ்சி சும்மா இருந்தனர். ராமகிருஷ்ணனுக்கு ஓரளவு சமஸ்கிருதம் தெரியும். அவனும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தான்.

"உங்களில் யாருக்கேனும் எதுவாவது சந்தேகம் உண்டா? இருந்தால் கேளுங்கள்,'' என்றார். அனைவரும் மவுனமாக இருந்தனர். ராமகிருஷ்ணன் எழுந்தான். "ஐயா, நீர் சொல்வது அனைத்தும் தவறு என்று எனக்குத் தெரியும். உமக்கு அது புரியும். சமஸ்கிருதம் நன்றாகத் தெரிந்தவர்களுக்கும் நான் சொல்வது விளங்கும்! ஆகவே, மேற்கொண்டு உரையாற்றாமல் இருப்பதே விசேஷம்!'' என்று கூறினார்.

இதைக் கேட்ட பந்தா பரந்தாமனின் மூக்கு சிவந்தது. கண்களில் கனல் பறந்தன. "யார் நீ, சின்னப் பயலே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா? என்னுடைய கருத்துக்களைத் தவறு என்கிறாய்! எனக்குள்ள செல்வாக்கு உனக்கு தெரியாது என்று கருதுகின்றேன்! எனக்கு அரசே நெருங்கிய நண்பர்'' என்றார்.

"ஐயா, இவ்வூர் மக்களை நீர் பயமுறுத்திக் கொண்டு வாழ்வதைப் போல என்னிடம் பயமுறுத்த நினைக்காதீர். நீர் சொல்வது தவறு என்றேன். அதற்கு ஏன் உம் செல்வாக்கைக் காட்டி என்னைப் பயமுறுத்த நினைக்கிறீர்.

"உமக்கு அரசர் நண்பராக இருக்கலாம். அதே அரசரால் உம் அநியாயங்களைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட ஓர் உயர் அதிகாரி நான். வேண்டுமானால் என்னைப் பற்றி அரசரிடம் நீர் புகார் கூறும், நானும் கூறுகிறேன்! யாருடைய பேச்சு எடுபடுகிறது என்று பார்க்கலாம்'' என்று கூறினான் ராமகிருஷ்ணன். இதைக் கேட்டதும் வாதத்தில் வல்லவரான பந்தா பரந்தாமனுக்கு வேர்த்துக் கொட்டியது. பேச்சிழந்து நின்றார்.

"உம்முடைய தவறுகளை நான் விளக்குவேன். எனக்கு நிறைய அலுவல்கள் இருப்பதால் இப்போதைக்கு முடியாது. அதுவும் தவிர இவ்வளவு பெரிய சபையில் மேலும் உம்மை அவமானப்படுத்த விரும்பவில்லை. “எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பெயரில் எல்லாரையும் அவமானப்படுத்துவதை இன்றோடு விட்டு விடுங்க. மனிதர்களை மனிதர்களாக பாருங்க. அவர்களோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க'' என்றான் ராமகிருஷ்ணன், தலை குனிந்தான் பரந்தாமன்.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Copyright 2012 - 2018, Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள். All rights Reserved.
தமிழ் சிறுகதைகள் (Tamil Siru Kathaigal). Tamilsirukathaigal.com is an online educational website offers tamil short stories (தமிழ் சிறுகதைகள்), thenali raman stories (தெனாலிராமன் கதைகள்), Aesop moral stories (ஈசாப் நீதிக் கதைகள்), siruvar neethi kathaigal, mulla stories (முல்லா கதைகள்), arasar kathaigal (அரசர் கதைகள்), tamil moral stories, varalattruk kathaigal, akbar and birbal stories (அக்பர் பீர்பால் கதைகள்), panchatantra stories (பஞ்சதந்திரக் கதைகள்) and more moral short stories in traditional tamil language with pictures, pdf to download free for kids and childrens.