Full width home advertisement

Moral Story Stories

Panchatantra Stories

Post Page Advertisement [Top]


கறுப்பு சீயூ!

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீனா, பல அரசுகளாக பிரிந்து கிடந்தது. ஒவ்வொரு சிறிய பகுதியும், ஓர் அரசரால் ஆளப்பட்டது. ஒரு கால கட்டத்தில் "கியூ' என்ற பகுதியை சூயன் என்ற பேரரசர் ஆட்சி செய்தார்.  

அவர் ஆடம்பரப் பிரியர். வண்ண வண்ண ஆடைகளை அணிவதிலும், மணம் தரும் விலை உயர்ந்த தைலங்களைப் பயன்படுத்துவதிலும் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் தலைமுடி, மீசை, குறுந்தாடி ஆகியவைகளை வெட்டி சீர் செய்ய தனி அலுவலர்களை வைத்திருந்தார்.

ஒவ்வொரு நாளும் விதவிதமான பிராணிகளைப் பிடித்து சமைத்து உண்பதில் சூயன் மகிழ்ச்சி அடைந்தார். ஒருநாளில் ஆறு அல்லது ஏழு முறை உணவு உண்பார். அவருக்கு சாப்பிடுவதிலும், வித விதமான ஆடை அணிவதிலும், பின்னர் உறங்குவதிலும் ஆர்வம் மிகுதி. நாட்டு மக்கள் நலனில் அவருக்கு அதிக அக்கறை இல்லை.

அவரது அந்தப்புரத்தில் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் இருந்தனர். உழைப்பு, நற்பண்பு, ஒழுக்கம், தூய உள்ளம், நேர்மை ஆகியவற்றில் அவர் அதிக அக்கறை இல்லாமல் இருந்தார்.

அந்நாட்டில் ஒரு கிராமத்தில் சீயூ என்ற பெண்மணி வசித்தாள். அவள் சாக்கடை போன்ற கறுப்பு நிறத்தில் அழகில்லாமல் இருந்தாள். அவள் கண்கள் குழியில் இருப்பது போல் தோன்றின. தலைமயிர் நெருக்கம் இல்லாமல், இடைவெளி விட்டு வளர்ந்திருந்தது. அவளை எவரும் விரும்பவில்லை. அதனால், நாற்பது வயது வரை அவளுக்கு திருமணம் நடக்கவில்லை. எனவே, அவள் தனியாக வாழ்ந்து வந்தாள்.

அப்போது அண்டை நாடான நூயு என்ற பகுதிக்கும், கியூவுக்கும் இடையே அடிக்கடி சண்டை மூண்டது. மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இது சீயூவுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்தது.

ஒருநாள் அவள் தைரியமாக மன்னரின் அரண்மனைக்கு சென்றாள்

காவலர்கள் அவளை உள்ளே விட மறுத்தனர். அவள் தனது வலிமை எல்லாம் சேர்த்து அவர்களை அடித்து தரையில் சாய்த்தாள். பின்னர் நேராக அரசரின் முன்னால் வந்து நின்றாள்.

அவளது அசிங்கமான தோற்றத்தைப் பார்த்து அரசர் வியப்படைந்தார். இப்படியும் அசிங்கமாக பெண்கள் இருக்க முடியுமா என்று சிந்தித்தார்.

பெண்ணே உனக்கு என்ன வேண்டும்?'' என்று அரசர் கேட்டார்.

எனக்கு ஆட்சிப் பணி செய்ய அனுமதி வேண்டும்,'' என்றாள்.

நீ ஏன் அவ்வாறு கேட்கிறாய்?'' என அரசர் கேட்டார்.

ஏனென்றால், நமது நாடு இக்கட்டான நிலையில் இருக்கிறது. நூயு, சோயூ என்ற பக்கத்து நாடுகள் நம்மை விழுங்க தயாராகிவிட்டன. அதே சமயம் நமது நாடும் மிகுந்த குழப்பத்தில் உள்ளது. இது ஜீவ மரணப் போராட்டமே ஆகும்! ஆனால், தாங்கள் இதில் அக்கறை இல்லாமல் இருப்பதை நினைத்தால், எனக்கு மிகுந்த வருத்தமாக இருக்கிறது,'' என்று சொன்னாள்.

அவளது சொல்லைக் கேட்ட அரசர் அதிர்ச்சியடைந்தார். "இதுவரை நாம் இதைக் கண்டு கொள்ளாமல் ஆடம்பர பிரியராக இருந்தது எவ்வளவு பெரிய தவறு' என்பதை அறிந்தார்.

சீயூ, என்னை மன்னித்து விடு.... நான் நாட்டின் மீது அக்கறை இல்லாமல் இருந்து விட்டேன். இன்று முதல் உன்னை எனது முதன்மை அமைச்சராக நியமிக்கிறேன்,'' என்றார்.

அரசர் சீயூவின் ஆலோசனையை கேட்டு நாட்டை காப்பாற்றினார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் சீயூ பட்டத்து ராணியாகவும் நியமிக்கப் பெற்றார். கடைசி காலம் வரை, அவள் அரசருக்கு உற்ற தோழியாகவும் இருந்தாள்.

கறுப்பு நிறத்தில் அழகற்றவளாய் இருந்த சீயூ இன்றும் மக்களால் போற்றிப் புகழப்படுகிறாள்.

Source : தினமலர்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

Copyright 2012 - 2018, Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள். All rights Reserved.
தமிழ் சிறுகதைகள் (Tamil Siru Kathaigal). Tamilsirukathaigal.com is an online educational website offers tamil short stories (தமிழ் சிறுகதைகள்), thenali raman stories (தெனாலிராமன் கதைகள்), Aesop moral stories (ஈசாப் நீதிக் கதைகள்), siruvar neethi kathaigal, mulla stories (முல்லா கதைகள்), arasar kathaigal (அரசர் கதைகள்), tamil moral stories, varalattruk kathaigal, akbar and birbal stories (அக்பர் பீர்பால் கதைகள்), panchatantra stories (பஞ்சதந்திரக் கதைகள்) and more moral short stories in traditional tamil language with pictures, pdf to download free for kids and childrens.