சூப்பர் திருடன்!

சூப்பர் திருடன்!

ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் சோளமாவு அரைத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் அவர்கள் இருவரும், “நீங்கள் யார்?'' என்று கேட்டனர்.

நீங்கள் இருவரும் இந்த வீட்டின் வேலைக்காரப் பெண்கள்தானே?'' என்று கேட்டான் திருடன்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட இருவரும், “நாங்கள் வேலைக்காரிகள் அல்ல... இந்த வீட்டின் உரிமையாளர்கள்,'' என்றனர்.

நான் நம்பமாட்டேன்... நீங்கள் வேலைக்காரப் பெண்கள்தான்

உண்மையிலேயே நீங்கள் இந்த வீட்டுப் பெண்களாக இருந்தால், அரைத்துக் கொண்டிருக்கும் சோளமாவை எடுத்துத் தின்னுங்கள்... நிறைய சாப்பிட்டால், நீங்கள் உரிமையாளர்கள். இங்கே எந்தப் பொருளையும் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. இல்லையேல் வேலைக்காரிகள்தான், '' என்றான் திருடன்.

வந்திருப்பது திருடன் என்று அறியாமல், இருவரும் சோளமாவை வாயில் போட்டுக் கொள்ளத் தொடங்கினர்.

இன்னும் சிறிது சாப்பிட்டால்தான் ஒப்புக் கொள்வேன்,'' என்றான். மேலும், மேலும் அவர்கள் சோளமாவைச் சாப்பிட்டனர்.

இருவர் வாயும் பேச முடியாமல் சோளமாவினால் ஒட்டிக் கொண்டது.

நான் யார் என்று கேட்டீர்களே, நான் ஒரு திருடன். உங்கள் நகைகளைக் கொள்ளை அடித்துச் செல்ல வந்துள்ளேன்,'' என்று சொல்லிவிட்டு அவர்கள் நகைகளை அறுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

சோளமாவு வாயில் ஒட்டிக் கொண்டிருந்ததால், "திருடன்' என்று கூச்சல் போட இயலாத தங்கள் முட்டாள்தனத்தை எண்ணித் தலை கவிழ்ந்தனர்.

Source : தினமலர்
சூப்பர் திருடன்! சூப்பர் திருடன்! Reviewed by Dinu DK on August 10, 2012 Rating: 5

No comments:

Powered by Blogger.