முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் | Mulla Stories in Tamil

முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி "முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?" என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.

நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் "உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்?" என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.

mulla nasruddinஉலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Mulla ( முல்லா ) nasruddin stories (கதைகள்) in tamil. முல்லாவின் ( mullah ) கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் (Kalvimaanukku Eluntha Santheygam). Download mulla nasruddin ( முல்லாவின் ) stories in tamil pdf.
முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் | Mulla Stories in Tamil முல்லா கதைகள் - கல்விமானுக்கு எழுந்த சந்தேகம் | Mulla Stories in Tamil Reviewed by Dinu DK on August 29, 2013 Rating: 5

7 comments:

  1. இதுபோன்று முல்லா, பீர்பால் மற்றும் பல அறிவுஜீவிகளின் கதைகளைப் பள்ளிக் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் சொல்வதற்காகத் தேவைப்படுகிறது எனது dhoppulkodi.blogspot.com அல்லது mamsai1974@gmail.com என்கிற இமெயிலுக்கும் அனுப்ப இயலுமென்றால், அனுப்பி வையுங்கள். எமது தமிழ் மாணவர்கள் சற்று இளைப்பாரட்டும். நன்றி, வாழ்க வளமுடன், செல்வகுமார், ஆசிரியர்

    ReplyDelete
  2. migavum payanulla kathaigal
    WELCOME sir

    ReplyDelete

Powered by Blogger.